லிபியா,ஆகஸ்ட் 6- லிபியாவிலிருந்து ஐரோப்பியாவிற்கு 600க்கும் அதிகமான அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்தப் படகில் பயணித்த அனைவரும் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தனர். அதில் 25 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை.
அந்நாட்டுக் கடற்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு, 400 பேரை உயிருடன் மீட்டனர்.மற்ற அனைவரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணியில் இத்தாலியைச் சேர்ந்த 3 கப்பல்களும் ஹெலிகாப்டர்களும், மேலும் இத்தாலி மற்றும் மால்டா நாடுகளின் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இதே பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 படகுகள் விபத்துக்குள்ளானதில் 450 அகதிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.