Home Featured நாடு “பராமரிப்புக் குறியீட்டின் மூலம் எம்எச்370 பாகம் என்பது உறுதியானது” – லியாவ்

“பராமரிப்புக் குறியீட்டின் மூலம் எம்எச்370 பாகம் என்பது உறுதியானது” – லியாவ்

546
0
SHARE
Ad

liow-tiong-laiபுத்ராஜெயா, ஆகஸ்ட் 6 – ரியூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகத்தில் இருந்த பராமரிப்பு குறியீட்டை வைத்து அது எம்எச்370 விமானத்தின் பாகம் தான் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.

அதனால் தான் அந்தப் பாகம் மாயமான எம்எச்370-ன் பாகம் தான் என்பதில் மலேசியாவும் மிக உறுதியாக இருப்பதாக லியாவ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரான்ஸ் நாட்டில் இந்த விசாரணையில் ஈடுபட்ட , மலேசிய விமானப் போக்குவரத்துறை உறுப்பினர்கள் மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த கூற்றில் உறுதியாக இருப்பதாகவும் லியாவ் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், விமானப் பாகத்தின் நிறத்தை வைத்தும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.

ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற பாகங்களை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தி வருவதாகவும், பிரஞ்சு அதிகாரிகளின் முடிவுகளுக்கு தாங்கள் மதிப்பளிப்பதாகவும் லியாவ் தெரிவித்துள்ளார்.

தற்போது எம்எச்370 தேடப்பட்டு வரும் பகுதிகளை மாற்றியமைக்க வேண்டுமா என்பதை அதிகாரிகளின் முடிவிற்கு தாங்கள் விட்டுவிட்டதாகவும், ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தேடுதல் பகுதிகள் குறித்த விவரங்கள் தெரியவரும் என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.

தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள், எம்எச்370 மர்மத்தை நெருங்கி விட்டோம் என்பதைக் காட்டுகின்றன என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.