Home Featured தமிழ் நாடு கைது செய்யப்பட்ட விஜய்காந்த் விடுதலை! ஈவிகேஎஸ் – இளங்கோவன் விஜய்காந்த் சந்திப்பு!

கைது செய்யப்பட்ட விஜய்காந்த் விடுதலை! ஈவிகேஎஸ் – இளங்கோவன் விஜய்காந்த் சந்திப்பு!

737
0
SHARE
Ad

சென்னை – நேற்று மதுவிலக்குப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா நேற்று மாலையே விடுதலை செய்யப்பட்டனர்.

vijayakanath-Premalatha நாடு முழுவதும் நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தேமுதிகவினரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கைது செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

அந்த சமயத்தில் அங்கு சென்ற விஜய்காந்த் இளங்கோவனைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பும் தமிழக அரசியலில் தற்போது முக்கியத்துவம் பெற்று இது குறித்து புதிய ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன.