Home Featured தொழில் நுட்பம் ஐஒஎஸ் தளத்திற்கான வாட்ஸ்அப்பின் புதிய மேம்பாடுகள் அறிவிப்பு!

ஐஒஎஸ் தளத்திற்கான வாட்ஸ்அப்பின் புதிய மேம்பாடுகள் அறிவிப்பு!

557
0
SHARE
Ad

Whatsapp-for-iOS1கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – ஐஒஎஸ் கருவிகளை வைத்திருக்கும் பயனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்புகளை, வாட்ஸ்அப் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் படி, இனி ஐஒஎஸ் பயனர்கள், காணொளிகளை வாட்ஸ்அப் மூலம் பேக்-அப் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட அந்த மேம்பாட்டில், காணொளி மற்றும் படங்களுக்கான வடிவமைப்பு மாற்றம், ‘கிராப்பிங்’ (Cropping) போன்ற கூடுதல் வசதிகளையும் பயனர்கள் செய்து கொள்ள முடியும்.

மேலும், ‘கான்டேக்ட்’ (Contact) பகிர்தலையும், ஆப்பிள் மேப் வசதி மூலம், இருக்கும் இடத்திற்கான பகிர்தலையும் மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த மேம்பாடுகள் மட்டும் தான் அறிவிக்கப்பட்டுள்ளனவா? என்றால், இவை மட்டுமல்ல அண்டிரொய்டில் மேற்கொள்ளப்பட சில வசதிகளும், தற்போது ஐஒஎஸ்-ல் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்டிரொய்டிற்கான வாட்ஸ்அப் பதிப்பில், தனித்தனி நபர்களுக்கான ‘நோட்டிஃபிக்கேஷன் டோன்களை’ (Notification Tones) அமைத்துக் கொள்ளுதல், வாட்ஸ்அப் அழைப்புகளின் போது அதிகமாகும் டேட்டா பயன்பாடுகளை (Data Usage), தாங்களாகவே குறைத்துக் கொள்ளுதல் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது அந்த வசதிகளும் ஐஒஎஸ் தளத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.

இது போன்ற மேம்பாடுகளால், இரு முக்கிய திறன்பேசித்தளங்களிலும் வாட்ஸ்அப், தவிர்க்க முடியாத செயலியாக மாறி உள்ளது.