Home இந்தியா நெசவாளர்களுக்குச் ‘சந்த் கபீர்’ விருது வழங்கிக் கெளரவித்தார் மோடி

நெசவாளர்களுக்குச் ‘சந்த் கபீர்’ விருது வழங்கிக் கெளரவித்தார் மோடி

576
0
SHARE
Ad

Narendra-Modi2சென்னை, ஆகஸ்ட் 7- சென்னை பல்கலைக் கழகத்தில் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தேசியக் கைத்தறித் தின விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நெசவாளர்களுக்குச் ‘சந்த் கபீர்’ விருதுகளை வழங்கிப் பிரதமர் மோடி கௌரவித்தார்.

தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுந்தரராஜன், பழனிவேல் மற்றும் ஜெயந்தி ஆகியோர் பிரதமர் கையால் ‘சந்த் கபீர்’ விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

விருது அளிக்கும் போது நெசவாளர்கள் சிலர், அவர்கள் தங்களது கையால் நெய்த அங்கவஸ்திரத்தை மோடிக்கு அன்புப் பரிசாகக் கொடுத்தனர். அதை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டார் மோடி.

#TamilSchoolmychoice