Home Featured உலகம் நாகசாகி அணு குண்டுவெடிப்பு – 70 ஆண்டுகளாகியும் மாறாத வடுக்கள்! (படத்தொகுப்பு)

நாகசாகி அணு குண்டுவெடிப்பு – 70 ஆண்டுகளாகியும் மாறாத வடுக்கள்! (படத்தொகுப்பு)

632
0
SHARE
Ad

டோக்கியோ, ஆகஸ்ட் 9 – ஆகஸ்ட் 9, 1945-ம் ஆண்டு, அமெரிக்கா தனது அசுர பலத்தை நிரூபிக்க, ஜப்பான் மீது இரண்டாம் முறையாக அணு ஆயுத தாக்குதல் நடத்தியது. நாகசாகி நகரத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, மூன்று நாட்களுக்கு முன்பு தான், அமெரிக்கா, ஹிரோஷிமா மீது தனது முதல் அணு ஆயுதத்தை பிரயோகித்தது. என்ன நடந்தது என்பதை உணர்வதற்குள், மீண்டுமொரு தாக்குதல். ஜப்பான் சரணடைந்த பின்னர் தான் அமெரிக்கா, தனது ஆக்ரோசத்தை நிறுத்தியது.

ஹிரோஷிமாவில் ஏறக்குறைய 1,40,000 மக்களையும், நாகசாகியில் 74,000 பேரையும் பறிகொடுத்த ஜப்பான், இனி போரே வேண்டாம் என்று முடிவெடித்து அறவழியை நோக்கி பயணிக்கத் துவங்கிய நாட்கள் அவை. ஆனால், அதற்காக ஜப்பான் கொடுத்த விலையில் இருந்து, இன்னும் அந்த நாட்டினரால் மீண்டு வர முடியவில்லை.

‘அழிவு மழை’ (Rain of Ruin) என முழங்கிய அமெரிக்கா, ஃபேட் மேன்’  (Fat Man) என்ற அணு ஆயுத்தம் கொண்டு நாகசாகியைத் தாக்கிய படங்களின் தொகுப்பை கீழே காண்க:

#TamilSchoolmychoice

bockscarஅணுஆயுதத்தை சுமந்து கொண்டு பறந்த பாக்ஸ்கார் விமானம்

nagasaki7அணுஆயுதத்தை செலுத்திய விமானக் குழுவினர்

nagasaki1

nagasakiநகரம் வெடித்துச் சிதறுகிறது

nagasaki2நகரத்தின் பெரும் பகுதி அழிந்துபோகிறது

nagasaki3இடிபாடுகளுக்கு இடையே பதுங்கி இருக்கும் மக்கள்

nagasaki4போருக்கு பின்னர் அமைக்கப்பட்ட நினைவிடப் பூங்கா

nagasaki9கதிர்வீச்சு தாக்குதலுக்கு ஆளான பெண்மணி