Home Featured நாடு மருத்துவ விடுப்பில் சென்றார் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர்

மருத்துவ விடுப்பில் சென்றார் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர்

635
0
SHARE
Ad

MACCகோலாலம்பூர், ஆகஸ்ட் 10 –  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அபு காசிம் முகமட் (படம்) தற்போது மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என வெகு நாட்களுக்கு முன்பே மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தி இருந்ததாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை ஆணையர் டத்தோ முஸ்தாஃபர் அலி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பணிக்கு திரும்பும் முன்னர் முறையாக ஓய்வெடுக்க வேண்டும் என அபு காசிமுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.
அபு காசிம் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் ஊழல் தடுப்பு ஆணையத்தின் இடைக்கால தலைமை ஆணையராக முஸ்தாஃபர் செயல்பட்டு வருகிறார்.