Home Featured நாடு அம்னோ இளைஞர்களே அச்சத்தால் மௌனம் காக்காதீர்கள் : மொகிதின் வலியுறுத்து

அம்னோ இளைஞர்களே அச்சத்தால் மௌனம் காக்காதீர்கள் : மொகிதின் வலியுறுத்து

594
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மொகிதின் யாசின் நீக்கத்தால், அம்னோ கட்சியினர் நஜிப்புக்கு சாதகமாக நிலை எடுப்பர் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அம்னோவில் பூசல்களும், வலுவான எதிர்ப்புக் குரல்களும் ஆங்காங்கு வெடிக்கத் தொடங்கியுள்ளன.

muhyddinகுறிப்பாக அம்னோ இளைஞர் பகுதித் தலைவரும் அமைச்சருமான கைரி ஜமாலுடின் எனது அமைச்சர் பதவி போனாலும் பரவாயில்லை என ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.

இந்நிலையில் கைரியின் தலைமையில் இயங்கி வரும் அம்னோ இளைஞர் பகுதியினர் நாடும், கட்சியும் எதிர்கொண்டுள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து தங்களது கருத்துக்களை தைரியமாகச் சொல்ல முன்வர வேண்டும் என முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் வலியுறுத்தி உள்ளார்.

#TamilSchoolmychoice

இளைஞர்கள் அச்சம் காரணமாக மௌனம் காக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். “நாட்டின் எதிர்காலம் குறித்து இளைஞர்கள் விவாதிக்க வேண்டும். முக்கிய விவகாரங்கள் குறித்து இளைஞர்கள் தாமே தைரியமாக முன்வந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். மாறாக மௌனமாக இருந்துவிட வேண்டாம். அரசு நிர்வாகத்தை பாதிக்கும் வகையில் சில முக்கிய விவகாரங்கள் கையாளப்பட்டதை விமர்சித்தேன். எனினும் அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. தேசிய முன்னணியிடம் இருந்து ஆட்சி அதிகாரம் கைநழுவாமல் பாதுகாக்கவே முயன்றேன்” என்றும் மொகிதின் கூறியுள்ளார்.

“நான் என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எனக்கு சரியெனப்படும் ஒரு விஷயத்துக்காக மட்டுமே நான் போராடுவேன் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்,” என்றார் மொகிதின் யாசின்.