Home நாடு எம்எச் 370: மலேசியக் குழுவை மாலத்தீவிற்கு அனுப்ப முடிவு!

எம்எச் 370: மலேசியக் குழுவை மாலத்தீவிற்கு அனுப்ப முடிவு!

607
0
SHARE
Ad

debrisகோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – ரீ யூனியன் தீவில் மீட்கப்பட்ட விமான பாகம் எம்எச் 370 விமானத்தின் பாகம் தான் என உறுதியாகி உள்ள நிலையில், மாலத்தீவு பகுதிகளிலும் சிதைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அரசு நிபுணர்கள் அடங்கிய குழுவை மாலத்தீவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாலத்தீவின் பா அடால் மற்றும் நூணு அடால் ஆகிய பகுதிகளில் இருந்து சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் நேற்று ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “மாலத்தீவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம், கண்டெடுக்கப்பட்ட பாகங்கள், விமான பாகங்களா? என ஆராய்ந்து வருகிறது. மேலும், அதனை ஆராய்வதற்காக மலேசிய நிபுணர்கள் குழுவையும் மாலத்தீவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

“எனினும், அந்த பாகங்கள் எம்எச் 370 விமானத்திற்கு சொந்தமானதா? என்பதை தற்போதே கூறிவிட முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.