புதுடில்லி,ஆகஸ்ட் 10- ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியை மையம் கொண்டு உருவான நிலநடுக்கம் வட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல பகுதிகளைத் தாக்கியது.
டெல்லி, சண்டிகார், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது.
டெல்லியில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.
வட இந்தியா தவிர, பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், பெஷாவர், முசாப்பராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது.
இந்நிலநடுக்கத்தால் தெய்வாதீனமாகப் பொருட்சேதமோ உயிர்ச் சேதமோ ஏதும் ஏற்படவில்லை.