Home கலை உலகம் கிட்டத்லான் போட்டியில் ஓடிய மகள்: “ஓடு ஓடு” என ஆரவாரித்த ஜோதிகா!

கிட்டத்லான் போட்டியில் ஓடிய மகள்: “ஓடு ஓடு” என ஆரவாரித்த ஜோதிகா!

878
0
SHARE
Ad

jothi_vc_1சென்னை, ஆகஸ்ட் 10- சென்னை ஒய். எம்.சி.ஏ மைதானத்தில் குழந்தைகளுக்கான ‘கிட்டத்லான் ‘ போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா- நடிகை ஜோதிகாவின் மகள் தியாவும் கலந்து கொண்டாள்.

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் பங்கேற்ற இந்தக் கிட்டத்லான் போட்டியில் குழந்தைகளின் பெற்றோர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியைப் பார்க்க ஒரு பெற்றோராக வந்திருந்தார் நடிகை ஜோதிகா.

#TamilSchoolmychoice

களத்தில் மகள் தியா ஓடுவதைக் கண்ட ஜோதிகா, ஒரு பெற்றோருக்கே உரிய ஆர்வத்தோடு மேடையில் ஏறிப் போய் மைக்கைப் பிடுத்து “ஓடு…ஓடு” என ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார். இது போட்டியில் பங்கேற்ற மற்ற குழந்தைகளின் பெற்றோரையும் போட்டி மனப்பான்மையையும் மீறிக் கவர்ந்தது.