Home Featured வணிகம் எம்ஏஎச்பி-யின் தலைமை நிதி அதிகாரி பதவி விலகல்!

எம்ஏஎச்பி-யின் தலைமை நிதி அதிகாரி பதவி விலகல்!

672
0
SHARE
Ad

MAHBகோலாலம்பூர்,ஆகஸ்ட் 10 – மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸின் தலைமை நிதி அதிகாரி பைசல் ஷாம் அபு மன்சூர்(படம்) பதவி விலகுகிறார் என்ற அறிவிப்பினை எம்ஏஎச்பி இன்று வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 17-ம் தேதி முதல், அவர் தனது பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவார் என தெரிய வருகிறது.

“பைசல், புதிய வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு தன்னை, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கும் படி கேட்டுக் கொண்டார். நிர்வாகம் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. புதிய வாய்ப்புகள் மூலம் அவரது எதிர்காலம் சிறக்க எங்களின் வாழ்த்துக்கள்” என்று எம்ஏஎச்பி நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

45-வயதான பைசல், கருவூலம் மற்றும் பெருநிறுவனம் சார்ந்த நிதிப் பிரிவுகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். எம்ஏஎச்பி-யில் பணியாற்றுவதற்கு முன்பாக அவர், அதன் துணை நிறுவனங்களிலும் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.