கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – மாலத்தீவில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பாகங்கள் எம்எச்370 விமானத்தின் பாகங்களாக இருக்க வாய்ப்பில்லை என்றும், அவை கடந்த பிப்ரவரி மாதம் கடலில் மூழ்கிய படகில் இருந்த பொருட்களாக இருக்கும் என்று அப்படகின் கேப்டன் அப்துல்லா ரசீத் கூறியுள்ளார்.
மாலத்தீவைச் சேர்ந்த ஹவீரு இணையதளத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி சுமார் 4000 யுனிட் சட்டங்களை (wall panels) ஏற்றிக் கொண்டு ரா அடோல் என்ற புதிய தீவிற்கு சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. மாலத்தீவில் கண்டெடுக்கப்பட்ட அந்த சிதைந்த பாகத்தைப் பார்த்தால், அது நாங்கள் படகில் கொண்டு சென்ற அந்த சட்டங்கள் போல் தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மாலத்தீவில் கண்டெடுக்கப்பட்டுள்ள அந்தப் பாகம் எம்எச்370-ன் பாகமா? என்பது குறித்து ஆய்வு செய்ய மலேசியா தனிக்குழு ஒன்றை அங்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.