Home உலகம் ஈராக்கில் 2 கார் குண்டு வெடித்ததில் 53 பேர் உடல் சிதறிப் பலி!

ஈராக்கில் 2 கார் குண்டு வெடித்ததில் 53 பேர் உடல் சிதறிப் பலி!

664
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_27849543095பாக்தாத்,ஆகஸ்ட் 11- ஈராக்கில் இரண்டு இடங்களில் வெடித்த கார் குண்டு வெடிப்பில் 53 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஈராக் கிழக்கு மாகாணமான தியாலாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்த குண்டுவெடித்ததில் 18 பேர் பலியானார்கள்; 44 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

அதே போல் பாக்தாத் அருகே பக்குவா நகரிலுள்ள கடைவீதியில் மற்றொரு சக்தி வாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் 35 பேர் உடல் சிதறிப் பலியானார்கள்; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள்.

#TamilSchoolmychoice

மேலும்,இக்குண்டுவெடிப்பில் ஏராளனமான கடைகள், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வெடித்துச் சிதறியதால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் ஐஎஸ் அமைப்பினருக்கும் அரசு படையினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருவதால், இந்தக் கார் குண்டு வெடிப்புத் தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாதிகள் தான் நடத்தியிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.