Home கலை உலகம் திரை உலகமே வேடிக்கை பார்த்த போது விஜய் மட்டுமே உதவினார் – டி.ராஜேந்தர் நெகிழ்ச்சி!

திரை உலகமே வேடிக்கை பார்த்த போது விஜய் மட்டுமே உதவினார் – டி.ராஜேந்தர் நெகிழ்ச்சி!

666
0
SHARE
Ad

vijay-simbu-richaசென்னை, ஆகஸ்ட் 11 – “வாலு படம் வெளியாகாமல் நாங்கள் தவித்துக் கொண்டிருந்த போது, திரை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில், விஜய் மட்டுமே உதவினார். அவர் அளித்த தார்மீக ஆதரவிற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று இயக்குனர்-நடிகர் டி.ராஜேந்தர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

புதுமுக இயக்குனர் விஜய் சந்தரின் இயக்கத்தில், சிம்பு-ஹன்சிகா இணைந்து நடித்துள்ள படம் வாலு. படம் தொடங்கி 2 வருடங்களுக்கு மேல் ஆகியும், பல்வேறு பிரச்சனைகளால் வெளியிட முடியாமல் தவித்து வந்தனர். இறுதியாக சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தரே படத்தை வெளியிட முடிவு செய்தார். ஆனால், பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில் தான், வாலு படத்தின் சிக்கல் நடிகர் விஜயின் காதுகளை எட்டியது.

உடனடியாக, விஜய் பல்வேறு உதவிகளை செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து அனைத்து சிக்கல்களும் நீங்கி படம் வெளியீட்டிற்கு தயாரானதாகவும் சமீபகாலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதனை சிம்புவும், டி.ராஜேந்தரும் உறுதி செய்தனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா நடிப்பில் தான் வெளியிட இருக்கும் ‘விஎஸ்ஒபி’ திரைப்படத்திற்காக வாலு படத்தை வெளியாக விடாமல் தடுக்கிறார் என்று சர்ச்சைகள் எழுந்தன.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக, சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், “வாலு படம் வரும் 14-ம் தேதி கண்டிப்பாக வெளியாகும். வாலுவிற்கு தொடர்ந்து பலரும் சிக்கல்களை ஏற்படுத்தி வந்தனர். படத்தின் மீது சுமார் 15 வழக்குகள் போடப்பட்டன. திரை அரங்குகள் வழங்கப்படாமல் முடக்கப்பட்டன. எனினும், அவை அனைத்தும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டது. வாலு படம் வெளியாகாமல் நாங்கள் தவித்துக் கொண்டிருந்த போது, திரை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில், விஜய் மட்டுமே உதவினார். அவர் அளித்த தார்மீக ஆதரவிற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்துள்ளார்.