Home Featured நாடு ‘எட்ஜ்’ இடைக்காலத் தடை நிறுத்தி வைக்கப்படுமா? – வெள்ளிக்கிழமை தெரியும்!

‘எட்ஜ்’ இடைக்காலத் தடை நிறுத்தி வைக்கப்படுமா? – வெள்ளிக்கிழமை தெரியும்!

675
0
SHARE
Ad

The Edge

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – எட்ஜ் குழுமத்தின் இரு பதிப்புகளுக்கு எதிரான இடைக்காலத் தடையின் மறுஆய்வு மனு விசாரணைக்கு வரும் வரை, தற்காலிகமாக அத்தடை உத்தரவை நிறுத்தி வைக்குமாறு அக்குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணை செய்யப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

1எம்டிபி விவகாரம் குறித்து தவறான செய்தி வெளியிட்டதாகக் கூறி எட்ஜ் குழுமத்தைச் சேர்ந்த ‘த எட்ஜ் வீக்லி’ மற்றும் ‘த எட்ஜ் பினான்சியல் டெய்லி’ ஆகிய இரு பதிப்புகளுக்கும் மூன்று மாதங்கள் இடைக்காலத் தடை விதித்து, கடந்த ஜூலை 24-ம் தேதி உள்துறை அமைச்சு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice