மும்பை, ஆகஸ்ட் 13- மேகி நூடுல்ஸ்க்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’-ல் காரீயம்-ன் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அதைத் தொடந்து நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ்க்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடையை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இவ்வழக்கு விசாரணையின் முடிவில் , இன்று மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீக்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தவிட்டது.
மேலும், மேகி நூடுல்ஸின் தரம் குறித்த புதிய ஆய்வை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.