Home கலை உலகம் மலேசியாவில் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் வெளியீடு!

மலேசியாவில் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் வெளியீடு!

669
0
SHARE
Ad

IMG_0279சென்னை, ஆகஸ்ட் 13- ஆர்யா- அனுஷ்கா இணைந்து நடிக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. இப்படம் தெலுங்கிலும் ‘ஜீரோ சைஸ்’ என்ற பெயரில்  எடுக்கப்படுகிறது.

இதில் அனுஷ்கா இரு வேடங்களில் நடிக்கிறார். பெயருக்கு ஏற்றபடி இடுப்பு இஞ்சி போல் இருக்க வேண்டும் என்பதற்காகச் சிரமப்பட்டுத் தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார்.

நடிகர் நாகார்ஜூனா இதில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்.

#TamilSchoolmychoice

பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் என்பவர் இயக்குகிறார். மரகதமணி இசை அமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில்,  பாடலை மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அக்டோபர் 2-ஆம் தேதி படம் வெளியீடு காணவிருக்கிறது.

பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்துவதென்பது இப்போது ஒரு பாணியாகப்( trend-ஆகப்)  பின்பற்றப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு வியாபார உத்திதான்!