Home உலகம் நீங்கள் வெற்றி பெற்றாலும் பிரதமராக முடியாது – ராஜபக்சேவிற்கு சிறிசேனா அதிர்ச்சி! 

நீங்கள் வெற்றி பெற்றாலும் பிரதமராக முடியாது – ராஜபக்சேவிற்கு சிறிசேனா அதிர்ச்சி! 

641
0
SHARE
Ad

sirisena1கொழும்பு, ஆகஸ்ட் 13 – இலங்கையில் வரும் 17-ம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல்  நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடுகிறார். பிரச்சாரக் கூட்டங்களில் தனக்கு பிரதமர் பதவி கிடைக்கும் என ராஜபக்சே உறுதியாகக் கூறிவந்தார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று ராஜபக்சேவிற்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “இலங்கையில் நீங்கள் அதிபராக இருந்த போது, செய்த ஜனநாயகப் படுகொலைகளை அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றாலும், உங்களை பிரதமராக்க நான் அனுமதிக்க மாட்டேன். அணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் ஒருவரைத் தான் பிரதமராக நியமனம் செய்வேன். அதற்கான அதிகாரம் எனக்கு உள்ளது” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதன் மூலம், இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.