Home கலை உலகம் விக்ரமின் ’10 எண்றதுக்குள்ள’ படத்தின் முன்னோட்டம் வெளியானது!

விக்ரமின் ’10 எண்றதுக்குள்ள’ படத்தின் முன்னோட்டம் வெளியானது!

624
0
SHARE
Ad

vikramசென்னை, ஆகஸ்ட் 13 – ‘ஐ’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம், கோலி சோடா படத்தின் இயக்குனர் விஜய் மில்டனின் இயக்கத்தில் நடித்திருக்கும் ’10 எண்றதுக்குள்ள’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியானது. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு காரணங்களால் நீண்டு கொண்டே இருந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளரும், பிரபல இயக்குனருமான ஏ.ஆர்.முருகதாஸிற்கும், விக்ரமிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், அதனால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாகவும் கூறப்பட்டது.

இப்படி தொடர்ந்து தாமதமாகி வந்த இந்த படம், தற்போது ஒருவழியாக முடிந்துவிட்டது. படத்தின் இறுதிக் காட்சிகளை, விஜய் மில்டன் ராஜஸ்தானில் நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் முன்னோட்டம் இன்று வெளியானது.

#TamilSchoolmychoice

எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள இந்த படத்தில், நடிகர் விக்ரம் பந்தயக் கார் வீரராக நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

இப்படத்தின் முன்னோட்டத்தைக் கீழே காண்க: