Home Featured இந்தியா ஐதராபாத்தில் நான்கு தீவிரவாதிகள் கைது – பொது மக்கள் அச்சம்!

ஐதராபாத்தில் நான்கு தீவிரவாதிகள் கைது – பொது மக்கள் அச்சம்!

530
0
SHARE
Ad

terroristஐதராபாத், ஆகஸ்ட் 14 – இந்தியா நாளை 69-வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில், இன்று ஐதராபாத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த நான்கு தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுதந்திர தினக் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என்று உளவுத்துறை அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், தற்போது தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

அதேபோல், அசாம் பகுதியில் தண்டவாளத்தை தகர்க்கும் நோக்கத்துடன் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.