Home Featured இந்தியா இந்திய உச்சநீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வளாகத்தில் பதற்றம்!

இந்திய உச்சநீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வளாகத்தில் பதற்றம்!

612
0
SHARE
Ad

Tamil-Daily-News_88448297978புதுடெல்லி, ஆகஸ்ட் 18- இந்திய உச்சநீதிமன்றத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளதால், உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் பரபரப்பும் பதற்றமுமாய்க் காணப்படுகிறது.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.இது வெறும் மிரட்டலாக இருக்கலாம்.

#TamilSchoolmychoice

இருப்பினும் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனையிலும் கண்காணிப்பிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

யாரேனும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டால், அதை முறியடிக்கும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.