பாங்காக், ஆகஸ்ட் 19 – பாங்காக்கில் பிரபல சுற்றுலாத்தளமான எரவம் சிரின் பகுதில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகக் காரணமான குண்டுவெடிப்பில் எந்த வகையான வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
(குண்டுவெடித்த இடத்திற்கு அருகே இருந்த வளாகத்தில் இரும்புத்துண்டு ஒன்று சன்னலில் செருகி இருப்பதைக் காணலாம்)
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் ஆடைகள் மற்றும் திசுக்களில் இருந்து எடுக்கப்பட்ட வெடிமருந்துத் துகள்களை வைத்து அது எந்த வகையான வெடிகுண்டு என்று கண்டுபிடித்துவிட முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பிற்குப் பிறகு உடனடியாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியை சோதனை செய்ததில் ‘பால் பியரிங்களைக்’ கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம், சதிகாரர்கள் டிஎன்டி வகை வெடிபொருளைப் பயன்படுத்தியிருக்கக்கூடும் என தாய்லாந்து அதிகாரிகள் கணித்துள்ளனர்.