Home Featured நாடு பாங்காக் குண்டுவெடிப்பு: ‘துண்டான கை’ மீட்பு – 5 வது மலேசியர் பலி என அஞ்சப்படுகின்றது!

பாங்காக் குண்டுவெடிப்பு: ‘துண்டான கை’ மீட்பு – 5 வது மலேசியர் பலி என அஞ்சப்படுகின்றது!

727
0
SHARE
Ad

malaysianகோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – பாங்காக் குண்டுவெடிப்பில் பலியான மலேசியர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் ஒரு மலேசியர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

பலியான நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பினாங்கைச் சேர்ந்த அந்த குடும்பத்தினர் சுற்றுலா சென்ற இடத்தில் இந்தத் துயரச் சம்பவம் நேர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

குண்டுவெடித்த சமயத்தில் பலியான நான்கு மலேசியர்களுடன் அவர்களது உறவினரான லிம் சூ சி (வயது 52) என்ற பெண்மணியும் இருந்துள்ளார். இந்நிலையில் அவரைக் காணவில்லை என்று தேடிய போது, சம்பவ இடத்தில் துண்டான கை ஒன்றை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

அந்தக் கை லிம் சூ சி -யுடையது தான் என அவரது உறவினர் காவ் வி காய் (வயது 33) நேற்று அடையாளம் காட்டியுள்ளார்.

இந்நிலையில், அந்தக் கையை மரபணு பரிசோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

பலியான 4 மலேசியர்களான லீ திஸ் சியாங், அவரது மகள் லீ ஜிங் சுவான், லிம் சா கெக் மற்றும் அவரது மகன் நியோ ஜாய் ஜுன் ஆகியோரின் சடலங்கள் பாங்காக் பொது மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் பலியாகியிருப்பதை அறிந்த அவர்களது அண்டை வீட்டுக்காரர்களும், நண்பர்களும் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளனர்.