Home Featured நாடு பாங்காக் குண்டுவெடிப்பு: பலியான மலேசியரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது!

பாங்காக் குண்டுவெடிப்பு: பலியான மலேசியரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது!

645
0
SHARE
Ad

malaysianபட்டர்வர்த், ஆகஸ்ட் 19 – பாங்காக் குண்டுவெடிப்பில் சிக்கி மாயமான பினாங்கைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி லிம் சூ சீ (வயது 52)-ன் சடலம் நேற்று நள்ளிரவு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன் மூலம், இக்குண்டுவெடிப்பில் பலியான மலேசியர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

லிம் சூ சீ-யின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து அவரது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான நண்பரான விசென் லிம் கிம் சியாங் (வயது 46) ‘த ஸ்டார்’ இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

லிம் சூ சீ -யின் சடலம் இன்று பிரேதப் பரிசோதனைகள் செய்யப்பட்டு நாளை பினாங்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.