Home இந்தியா பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்: ஆய்வுப் பட்டியல் வெளியீடு!

பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்: ஆய்வுப் பட்டியல் வெளியீடு!

545
0
SHARE
Ad

fb-groupசென்னை, ஆகஸ்ட் 20- தேசியக் குற்றப் பதிவு ஆணையத்தால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில், இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில் 5 யூனியன் பிரதேசத்தை அடுத்துத் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதாவது, நாகலாந்து, லட்சத்தீவு புதுச்சேரி, தத்ரா நகர்வேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய ஐந்து யூனியன் பிரதேசங்கள் தான் பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பானவை என அந்த ஆய்வு முடுவு தெரிவித்துள்ளது.

அடுத்ததாகத் தமிழ்நாடு பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பு அளிக்கும் மாநிலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நாகலாந்தில்  2014-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 67 நடந்து உள்ளன.

லட்சத்தீவில் 2014-ஆம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிராக வன்முறை தொடர்பாக 4 வழக்குகள் பதிவாகி உள்ளன.

புதுச்சேரியில் 2014-ஆம் ஆண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 77 வழக்குகள் பதிவாகி உள்ளன.

தத்ரா நாகர் ஹவேலியில் 21 வழக்குகள் பதிவாகி உள்ளன.

டாமன் மற்றும் டையூவில் சுமார் 15 வழக்குகள் பதிவாகி உள்ளன.

இக்குற்றங்கள் எல்லாம்  அம்மாநிலத்திலுள்ள மக்கள்தொகையைக் கணக்கிடும் போது 6 சதவீத்திலிருந்து 10 சதவீதத்திற்குள் தானாம்.

பெண் முதலமைச்சர் ஆட்சி செய்து வரும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 6325 குற்றங்கள் பதிவாகிஉள்ளன. இருப்பினும் மாநிலத்தில் மொத்த பெண்கள் எண்ணிக்கையக் கருத்தில் கொள்ளும் போது குற்றங்களின் எண்ணிக்கையானது 18.4 சதவிதமாக உள்ளது.

டெல்லி, மராட்டியம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

இந்தியாவில் பாலியல் பாலத்கார சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலமாக தலைநகர் டெல்லி உள்ளதோடு, டெல்லியில் கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 1,800 வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது