கோலாலம்பூர் – கடந்த சில மாதங்களாகவே, நாம் குரோம் தேடுபொறியில், பொதுவான செய்திகள் அல்லது தகவல்களை தேடும் பொழுது அந்த தகவல்களுடன் தொடர்புடைய டுவிட்டர் பதிவுகளையும் காண்பித்து வந்தது. இந்நிலையில், தனிநபர் டுவிட்டர் கணக்குகளையும் இனி ‘டெஸ்க்டாப்’ (Desktop)-ல் தேடுவதற்கான வசதிகளை கூகுள் நடைமுறைப்படுத்தி உள்ளது.
இதற்கான அறிவிப்பினை கூகுள் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெஸ்க்டாப் தேடலில், டுவிட்டர் பதிவுகளை எப்படி பார்க்க முடியும் என்று கேட்கத் தோன்றும். உதாரணமாக, தேடுபொறியில் #Selliyal-ஐ தேடினால், செல்லியலின் டுவிட்டர் பதிவுகள் காண்பிக்கப்படும்.
அதேபோல், பொதுவான செய்திகள் அல்லது தகவல்களை தேடினால், குறிப்பிட்ட அந்த செய்தியின் டுவிட்டர் பதிவுகளும், அது சார்ந்து டுவிட்டுகளும் திரையில் தோன்றும். உதாரணமாக நாசா தொடர்பாக தேடினால், நாசாவின் டுவிட்டர் கணக்கும், அது சார்ந்த புதிய டுவிட்டுகளும் திரையில் தோன்றும்.
இதன் மூலம் டுவிட்டரின் இயக்கம் பயனர்கள் மத்தியில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.