இளையராஜாவிற்கு கடந்த வாரம் திடீரென அஜீரணக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் இதய நோய்க்கான சிகிச்சை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின. அடுத்த சில நாட்களில் அவர், பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பினார்.
இந்நிலையில், அவருக்கு நேற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
Comments