Home உலகம் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்து லீ சியான் லூங் வெளிப்படையான பதில்!

வெளிநாட்டு ஊழியர்கள் குறித்து லீ சியான் லூங் வெளிப்படையான பதில்!

567
0
SHARE
Ad

lee-hsien-loongசிங்கப்பூர் – சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கான பணி நியமனம் மற்றும் அவர்களின் குடியேற்றம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், சிங்கப்பூரின் பொருளாதார முன்னேற்றத்தில் வெளிநாட்டவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அந்நாட்டின் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “வெளிநாட்டவர்களுக்கான பணி நியமனம் மற்றும் அவர்களின் குடியேற்றம் தொடர்பாக முடிவு எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நாம் எடுக்கும் முடிவுகளில் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய பல்வேறு அம்சங்கள் உள்ளன.”

“வெளிநாட்டு ஊழியர்களுக்கான கதவுகளை முடிவு விட்டால், அது நாட்டின் பொருளாதாரத்தில் தொய்வை எற்படுத்திவிடும். பல்வேறு நிறுவனங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் பட்சத்தில், அவர்களுக்கான குடியிருப்புகளும் அவசியமாகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.