Home Featured நாடு ரிங்கிட் தொடர் வீழ்ச்சி:1அமெரிக்க டாலருக்கு 4.26 ரிங்கிட்டாகப் பதிவு!

ரிங்கிட் தொடர் வீழ்ச்சி:1அமெரிக்க டாலருக்கு 4.26 ரிங்கிட்டாகப் பதிவு!

785
0
SHARE
Ad

???????????????????????????????????????கோலாலம்பூர் – உலக சந்தையில் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வரும் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு, இன்று காலை மேலும் சில புள்ளிகள் சரிந்து, அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 4.2610 / 2660 என்ற நிலையில் பதிவாகியுள்ளது.

நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 4.2475 / 0415 ஆக இருந்த ரிங்கிட் இன்று மேலும் சரிவை சந்தித்துள்ளது.

அதேவேளையில், சிங்கப்பூருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று காலை நிலவரப்படி, 1 சிங்கப்பூர் டாலருக்கு 3.03 ரிங்கிட்டாகப் பதிவாகியுள்ளது.

#TamilSchoolmychoice