ரிங்கிட் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சியாளர்கள் அரசியல் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றாலும், தனது மாநிலத்தில் வாழும் மக்களின் நலனிலும், வளமான வாழ்விலும் தனக்கு முக்கியப் பொறுப்பு உண்டு என்றும் சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய நிலவரப்படி, ரிங்கிட்டின் மதிப்பு கிட்டத்தட்ட அதன் மதிப்பில் கால் பங்கு சரிந்துவிட்டதை சுட்டிக் காட்டியுள்ள சுல்தான், விரைவில் அதற்கு தீர்வு கண்டே ஆக வேண்டிய நிலையில் அரசாங்கம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.