Home இந்தியா மருத்துவமனையில் இன்று சோவைச் சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ்!

மருத்துவமனையில் இன்று சோவைச் சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ்!

626
0
SHARE
Ad

ramdoss_cho1_2527122fசென்னை-  சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாகச் சிகிச்சை பெற்று வரும், துக்ளக் பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான ‘சோ’ ராமசாமியைப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

ராமதாஸ் ஒரு மருத்துவர் என்பதால் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், சோ அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கினார்.

நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு நேரில் வந்து  சோவைச் சந்தித்து நலம் விசாரித்துவிட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து இன்று ராமதாஸ் வந்து நலம் விசாரித்தார்.

#TamilSchoolmychoice

அவரைத் தொடர்ந்து மேலும் பல முக்கியத் தலைவர்கள் நேரில் வந்து சோவைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.