Home உலகம் பெண்கள் அணியும் நீச்சல் உடையில் விநாயகர் உருவமா? இந்துக்கள் எதிர்ப்பு!

பெண்கள் அணியும் நீச்சல் உடையில் விநாயகர் உருவமா? இந்துக்கள் எதிர்ப்பு!

1243
0
SHARE
Ad

swகலிபோர்னியா- அமெரிக்காவிலுள்ள ஆடை தயாரிப்பு நிறுவனம், பெண்கள் அணியும் நீச்சல் உடையில் விநாயகர் உருவம் பொறித்திருப்பதைக் கண்டு இந்து மதத்தினர் கொதித்துப் போயுள்ளனர்.

இதற்குப் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்திருப்பதோடு, உடனடியாக இந்த நீச்சல் உடை விற்பனையை அந்த நிறுவனம் நிறுத்த வேண்டும் என்றும், இத்தகைய உடைகளைத் தயாரிப்பதை நிறுத்துவதோடு, விற்பனைக்காகக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆடைகளையும் உடனே திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 20 நாட்களே உள்ளன.விநாயகர் சதுர்த்திக்காகப் பலரும் பல விதமான விநாயகர் உருவச் சிலைகளை வடிவமைத்து வணங்கத் தயாராகி வரும் நிலையில், பெண்களின் நீச்சல் உடையில் விநாயகர் உருவம் பொறித்து விற்பனைக்கு விட்டுள்ளது உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்களையும் ஆத்திரப்பட வைத்துள்ளது.

#TamilSchoolmychoice