Home உலகம் லிபியாவில் தொடரும் சோகம்: 150 அகதிகள் படகு விபத்தில் பலி!

லிபியாவில் தொடரும் சோகம்: 150 அகதிகள் படகு விபத்தில் பலி!

626
0
SHARE
Ad

libya1திரிபோலி – லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர, இரண்டு படகில் புறப்பட்ட 400 அகதிகள், மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்து ஏற்பட்டு கடலில் மூழ்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த இத்தாலி கடல் படையினர், நூற்றுக்கணக்கான அகதிகளை மீட்டனர். எனினும், கடல் படையினர் வருவதற்கு முன்னரே பலர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது வரை, கடலில் மிதந்த 85 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.