Home இந்தியா ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழல்: தனக்குத் தொடர்பில்லை எனக் கார்த்தி சிதம்பரம் மறுப்பு!

ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழல்: தனக்குத் தொடர்பில்லை எனக் கார்த்தி சிதம்பரம் மறுப்பு!

570
0
SHARE
Ad

1440484128-3731சென்னை- ராஜஸ்தான் மாநிலத்தில் 108 அவசரச் சேவை வாகனங்கள் (ஆம்புலன்ஸ்) வாங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அஷோக் கெஹலோட், இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தது.

கார்த்திக்குச் சொந்தமான சிகித்சா ஹெல்த்கேர் நிறுவனம் கொடுத்த ஆலோசனையின் பேரில்தான் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைப்பில் சில மாறுதல்களைச் செய்ததாகவும், இதன் காரணமாகவே அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச் சாட்டை கார்த்தி சிதம்பரம் மறுக்கிறார்.

“2012-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி வரை சிகித்சா ஹெல்த்கேர் நிறுவனத்தின் தனிப்பொறுப்பு இயக்குநராக இருந்தேன். அந்நிறுவனத்தின் செயற்பிரிவு இயக்குநராக நான் ஒருபோதும் இருந்ததில்லை. எனவே, அந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் நான் எப்போதுமே தலையிட்டதில்லை.

#TamilSchoolmychoice

சிகித்சா ஹெல்த்கேர் நிறுவனத் தில் வெளிநாட்டு நிறுவனங்கள் பல முதலீடு செய்திருந்தன. ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள கிரித் சோமியாவை சிகித்சா நிறுவனம் முறைகேட்டு புகாரில் பணிநீக்கம் செய்திருந்தது. அதனால் அவர் அவதூறு பரப்பியிருக்கலாம். மேலும், அந்நிறு வனத்தில் எனக்கு பங்கு ஏதும் இல்லை” என மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இது அரசியல் பழிவாங்கும் சதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாகச் சிகித்சா ஹெல்த்கேர் நிறுவனத் தின் இயக்குநர்கள் ஸ்வேதா மங்கள், நரேஷ் ஜெயின், ரவி கிருஷ்ணா ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனால், இதில் எந்த விதமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.