கலிபோர்னியா – கடந்த 17 வருடங்களாக கணினியில் தேடுதல் பொறியாக முதலிடத்தில் இருந்து வரும் கூகுள் நிறுவனம், இன்று தன்னுடைய புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்பு டெஸ்க்டாப் கணினி மூலம் மட்டுமே கூகுளைப் பயன்படுத்த முடியும். ஆனால் இப்போது பல அப்ளிகேஷன் மற்றும் நவீன சாதனங்களில் கூட கூகுளை உபயோகப்படுத்த முடிகிறது. இதற்குக் காரணம் கூகுளின் பரிணாம வளர்ச்சியேயாகும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சின்னம், மிகச் சிறிய திரையில் கூட கூகுள் இயங்கும் என்பதைக் காட்டுகிறது.
இனி அனைத்துச் சேவைகளுக்கும் ஒரே லோகோவை பயன்படுத்தலாம்.இதன் மூலம் இன்னும் எளிதாகக் கூகுளில் உங்கள் தேடுதலை விரிவாக்க முடியும்
இதுநாள் வரை கூகுளின் முகப்புப் பக்கத்தில் காணப்படும் Google என்னும் எழுத்துக்களை ஒரு மாயக்கரம் அழித்துவிட்டு, புதிய லோகோவை எழுதுவதைப்போன்ற ஒரு சித்தரிப்புக் காட்சி, கூகுள் முகப்புப் பக்கத்தில் இன்று காணப்படுகின்றது.
இந்த மாற்றம் இன்றைய நாளை மட்டுமல்ல; எதிர்காலத்தையும் காட்டுகிறது” என்கிறது கூகுள் நிறுவனம்.