Home இந்தியா மது ஒழிப்புப் போராட்டத்தில் அன்புமணிக்குக் கருப்புக் கொடி: விடுதலைச் சிறுத்தையினர் கைது!

மது ஒழிப்புப் போராட்டத்தில் அன்புமணிக்குக் கருப்புக் கொடி: விடுதலைச் சிறுத்தையினர் கைது!

524
0
SHARE
Ad

anbumani_2535764fவள்ளியூர் – திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேருந்து நிலையத்தில் பாமக சார்பில் மது ஒழிப்புப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் பாமக-வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

“தேர்தலுக்காக மட்டுமே திமுக மது ஒழிப்புக்கு ஆதரவாகப் பேசி வருகிறது. ஏற்கனவே மது விலக்கு குறித்து அறிவித்த உறுதிமொழியைக் கருணாநிதி நிறைவேற்றவில்லை.

#TamilSchoolmychoice

அதிமுக-வும், திமுக-வும் மதுவைக் கொடுத்து மக்களைச் சீரழித்துவிட்டன. ஆகையால் இரண்டு கட்சிகளையுமே புறக்கணிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் முடியும். 2016-ஆம் ஆண்டில் ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகத்தைப் பாமக உருவாக்கும். இது பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் சாத்தியம்” என்று பேசினார்.

அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் சுந்தர் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் 15 பேர் அன்புமணி ராமதாஸ் பேசிக்கொண்டிருந்த இடத்திற்குத் திரண்டு வந்து, அன்புமணிக்கு எதிராக முழக்கமிட்டபடி அவருக்குக் கறுப்புக் கொடி காட்ட முயன்றனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கருப்புக் கொடி காட்ட முயன்ற 15 பேரையும் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு  முன்பு சகோதரக் கட்சி போல் செயல்பட்டு வந்த பாமக, விடுதலைச் சிறுத்தை கட்சிகள் இரண்டும், தலித் இனத்தைச் சேர்ந்த தர்மபுரி நாவரசு காதல் விவகாரத்தில் கொலையுண்ட சம்பவத்திற்குப் பிறகு எலியும் பூனையுமாக அடிக்கடி மோதிக் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.