இந்தத் திடீர் சந்திப்பு அரைமணி நேரம் நீடித்தது.
இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சுவாமி, “நான் பாஜக- தேமுதிக கூட்டணி குறித்துப் பேச வரவில்லை. கூட்டணி குறித்துப் பேசுவதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. நட்பு ரீதியான சந்திப்பு இது.
திமுகவுக்குப் போட்டியாக அதிமுக ஆட்சியிலும் ஊழல் அமோகமாக நடந்து வருகிறது. ஆகையால் வரும் தேர்தலில் தமிழக மக்கள் இரண்டு கட்சியையுமே ஏற்க மாட்டார்கள்; மூன்றாவது சக்தியைத் தான் ஏற்பார்கள்” என்று சூசகமாகத் தெரிவித்தார்.
எனவே, 2016 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி அமையலாம்.
விஜயகாந்த் இந்தச் சந்திப்பு குறித்து எந்தத் தகவலும் வெளியிடவில்லை.