Home இந்தியா ‘அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கம்’ தொடக்கம்!

‘அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கம்’ தொடக்கம்!

969
0
SHARE
Ad

abdul_kalam_rashtrapati_india_wallpapers1-900x450ராமேசுவரம்- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைந்து 40–ஆவது நினைவு நாளில் ‘அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம்’ என்ற அமைப்பு  தொடங்கப்பட்டிருக்கிறது.

அப்துல்கலாம் விதைத்த லட்சியக் கனவின்படி இளைஞர்களை உருவாக்கும் பணியை வழிநடத்திச் செல்ல இவ்வியக்கம் தொடங்கப்பட்டிருப்பதாக அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், அறிவார்ந்த விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களை உருவாக்குவதாகும். மற்றொரு நோக்கம் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதாகும்.

#TamilSchoolmychoice

பள்ளிகள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களோடு இணைந்து அப்துல் கலாமின் ‘இந்தியா 2020’ என்ற தொலை நோக்குப் பார்வையின் 10 கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படும்.

இதன் தலைமையிடம் புதுடெல்லியில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.