Home Featured நாடு இன்றைய அம்னோ கூட்டத்தில் மொகிதீன் கலந்து கொள்வது உறுதி!

இன்றைய அம்னோ கூட்டத்தில் மொகிதீன் கலந்து கொள்வது உறுதி!

795
0
SHARE
Ad

muhidinகோலாலம்பூர் – இன்று நடைபெறவுள்ள அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கலந்து கொள்வார் என்று அவரது உதவியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் துணைப் பிரதமர் பதவியிலிருந்து தான் அதிரடியாக நீக்கப்பட்ட பிறகு அம்னோவின் துணைத் தலைவர் என்ற முறையில் மொகிதீன் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் இதுவாகும்.

எனினும், இன்று நடைபெறும் கூட்டத்தில் மொகிதீனை துணைத்தலைவர் பதவிலிருந்து நீக்குவது தொடர்பான ஆரூடங்களுக்கு, அம்னோவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice