Home Featured நாடு அமனா நெகாராவுடன் இணையும் எண்ணமில்லை – ஹாடி திட்டவட்டம்

அமனா நெகாராவுடன் இணையும் எண்ணமில்லை – ஹாடி திட்டவட்டம்

893
0
SHARE
Ad

Hadi Awang PAS Presidentகோல திரங்கானு – பாஸ் கட்சிக்கென்று தனி வலிமை இருக்கும் நிலையில், தாங்கள் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள அமனா நெகரா கட்சியுடன் இணையும் எண்ணம் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைவதில் பல பாடங்களைப் பெற்றுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ள ஹாடி, முந்தைய அனுபவங்கள் மூலம் தற்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“புதிய கட்சிகளை ஏற்கப் போவதில்லை என்பதில் பாஸ் இன்னும் தனது முடிவில் உறுதியாக உள்ளது. நாங்கள் எங்களது நிலைப்பாட்டில் பிடிப்புடன் இருப்போம்” என்று ஹாடி நேற்று கோல திரங்கானு மாநிலக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice