கிள்ளான் அருகே சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது கெவின் மொராயிசின் சடலம் தான் என்றும் பேஸ்புக்கில் இன்று தகவலொன்று பலராலும் பகிரப்பட்டது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலை மெனாரா டூத்தாவிலுள்ள தனது இல்லத்திலிருந்து வேலைக்குச் சென்ற கெவின் அதன் பின் மாயமானார். இந்நிலையில் சனிக்கிழமை அவர் பயன்படுத்திய அரசாங்க கார், ஹூத்தான் மெலிந்தான் அருகேயுள்ள செம்பனைத் தோட்டத்தில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments