Home கலை உலகம் தெலுங்கானாவில் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்தார் பிரகாஷ்ராஜ்!

தெலுங்கானாவில் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்தார் பிரகாஷ்ராஜ்!

710
0
SHARE
Ad

B824071637Z_1_2014_1850321gஐதராபாத் – நடிகர் பிரகாஷ் ராஜ் தெலுங்கானாவில் உள்ள கொண்டாரெட்டிபள்ளி என்னும் கிராமம் ஒன்றைத் தத்தெடுத்துள்ளார்.

அவருக்கு முன்பு நடிகர் மகேஷ் பாபு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரிபாலம் கிராமத்தைத் தத்தெடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது பிரகாஷ் ராஜும் தெலுங்கானாவில் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார்.

‘ஸ்ரீமந்துடு’ என்னும் தெலுங்குப் படம் கிராமங்களைத் தத்தெடுப்பது பற்றியதாகும்.அப்படம் வெளிவந்த பிறகு கிராமங்களைத் தத்தெடுக்கும் ஆர்வம் நடிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

நடிகர் பிரகாஷ் ராஜ் அண்மையில் ‘பிரகாஷ் ராஜ்  பவுண்டேஷன்’ எனும் அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளார். அந்த அறக்கட்டளையின் மூலம் அடிப்படை வசிதிகள் அற்ற ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அதை மேம்படுத்த விரும்பினார்.

இது தொடர்பாக மாநிலப் பஞ்சாயத்து ராஜ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே. தாரகராமா ராவைச் சந்தித்துத் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரும் அதற்கு மனப்பூர்வமாக ஒப்புதல் அளித்தார்.

அதைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ் கொண்டாரெட்டிபள்ளி என்னும் கிராமத்தைத் தத்தெடுத்தார். அக்கிராமத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்யத் திட்டமிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.

மேலும் தெலுங்கானா அரசுடன் சேர்ந்து விவசாயிகளுக்குத் தேவையான அனித்து உதவிகளையும் செய்ய உள்ளார். அந்தக் கிராமத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அமைத்துக் கொடுக்க உள்ளார்.

பிரகாஷ்ராஜின் அனைத்து முயற்சிகளுக்கும் அரசு உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் கே. தாரகராமா ராவ் கூறியுள்ளார்.