Home உலகம் சிரியா குழந்தை அய்லான் இறந்து கிடந்ததைப் போல் படுத்து அஞ்சலி!

சிரியா குழந்தை அய்லான் இறந்து கிடந்ததைப் போல் படுத்து அஞ்சலி!

1011
0
SHARE
Ad

Aylan Kurdiராபாத் – சிரியாவிலிருந்து துருக்கிக்குப் படகில் செல்லும் போது படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி உயிரிழந்த குழந்தை அய்லானுக்கு  மொராக்கோ கடற்கரையில் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மொராக்கோவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி, கடற்கரையில் அய்லான் அணிந்திருந்த ஆடை போல் அணிந்து, மணலில் குழந்தை அய்லான் இறந்து கிடந்ததைப் போல் குப்புறப் படுத்து அவனுக்கு அஞ்சலி செலுத்தினர். சுமார் 20 நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல பாலஸ்தீனக் கடற்கரையில் குழந்தை அய்லான் கடற்கரையில் இறந்துகிடந்ததைப் போல் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice