புதுடில்லி – இந்தியாவில் அடுத்த கட்ட அரசியல் பரபரப்பாகப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்கள் ஐந்து கட்டங்களாக, அக்டோபர் 12 முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறும்.
243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 8ஆம் தேதி நடைபெறும்.
நடப்பு பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
6.68 கோடி வாக்காளர்களைக் கொண்டது பீகார் மாநிலம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி ஒரு புறமும், நடப்பு முதலமைச்சர் நிதிஷ்குமார், அவரது முன்னாள் அரசியல் எதிரியாக இருந்து தற்போது நண்பராக மாறியுள்ள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் மற்றும் காங்கிரஸ் ஆகியோர் இணைந்த கூட்டணி இன்னொரு புறத்திலுமாக இந்தத் தேர்தலில் களம் காண்கின்றன.
தேர்தல்கள் மிகவும் கடுமையானதாகவும், எந்த அணி வென்றாலும் குறுகிய தொகுதிகள் வித்தியாசத்தில்தான் வெல்ல முடியும் என்ற நிலையிலும் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.