Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தல்: அக்டோபர் 1-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்!

நடிகர் சங்கத் தேர்தல்: அக்டோபர் 1-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்!

487
0
SHARE
Ad

vishinsideசென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி ஈ.பத்மநாபன் தெரிவித் துள்ளார்.

2015 – 2018 ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூர் செயின்ட் எப்பாஸ்  மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 18-ஆம் தேதி நடை பெறும் என்று அவர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று வேட்பு மனு தாக்கலுக்கான தேதியை அவர் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

உயர் நீதிமன்ற உத்தரவின்படி தயார் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

அக்டோபர் 1-ம் தேதி காலை 11 மணி முதல் 3-ம் தேதி 5 மணி வரை தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

வெளியூரில் இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்கள் நேரில் வர இயலாவிட்டால் அக்டோபர் 3-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் அலுவலகத்தில் கிடைக்குமாறு வேட்புமனுக்களைத் தபால் அல்லது கொரியர் மூலம் அனுப்பலாம்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறும்.

போட்டியில் இருந்து விலகிக்கொள்ள விரும்புபவர்கள் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாக அலுவலகத்தில் கடிதத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.