Home Featured தொழில் நுட்பம் வாட்சாப்பில் புதிய வழு – பயனர்களுக்கு எச்சரிக்கை!

வாட்சாப்பில் புதிய வழு – பயனர்களுக்கு எச்சரிக்கை!

562
0
SHARE
Ad

crticial-whatsapp-vulnerabilityகோலாலம்பூர் –  வாட்சாப் பயனர்களை அச்சுறுத்தக் கூடிய வழுவை (bug) ஹேக்கர்கள் கண்டுபிடித்து விட்டனர் என்றே தெரிகிறது. இதனால் ஏறக்குறைய 200 மில்லியன் பயனர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வாட்சாப்பில் 900 மில்லியன் பயனர்கள் உள்ளனர். அது என்ன 200 மில்லியன் பேரை குறி வைத்து வழு உருவாக்கி உள்ளார்கள்? என்று கேட்கத் தோன்றும்.

இந்த 200 மில்லியன் பேரும், வாட்சாப்பை செயலி வடிவில் பயன்படுத்தாமல், வலைத்தளம் மூலமாக பயன்படுத்துகின்றனர். அவர்களை குறித்து வைத்து தான் இந்த தாக்குதல் தொடங்கி உள்ளது. சமீபத்தில், தொழில்நுட்ப நிறுவனம் ‘செக் பாய்ண்ட்’ (Check Point) இது தொடர்பாக வாட்சாப் நிறுவனத்தை எச்சரித்துள்ளது.

செக் பாய்ண்ட் நிறுவனத்தின் கூற்றுப்படி, வாட்சாப் வலைத்தள பயன்பாட்டில் ஹேக்கர்கள், ‘ரேன்சம்வேர்’ (Ransomware) என்ற புதிய மால்வேரை பரப்பி வருகின்றனர். ‘ரேன்சம்’ (Ransom) என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தம் பிணைத் தொகை என்று பொருள். நம் வாட்சாப் கணக்கு இந்த மால்வேரால் பாதிக்கப்பட்டால், அதனை மீட்க நாம் பணம் செலுத்த வேண்டி இருக்கும். அதன் காரணமாகவே அந்த நிரலுக்கு ரேன்சம்வேர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பொதுவாக காண்டேக்ட்களை (Contacts) அனுப்பப் பயன்படும் விர்சுவல் கார்ட் (Vcard) மூலமாகவே இந்த மால்வேர் பரப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே பயனர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரும் விகார்ட்டுகளை திறப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.