Home Featured நாடு “சிவப்பு டி-சட்டைகளுக்கு மட்டும் ஏன் தடை விதிக்கவில்லை” – சாஹிட் ஹாமிடிக்கு லிம் கிட் சியாங்...

“சிவப்பு டி-சட்டைகளுக்கு மட்டும் ஏன் தடை விதிக்கவில்லை” – சாஹிட் ஹாமிடிக்கு லிம் கிட் சியாங் கண்டனம்!

584
0
SHARE
Ad

Lim-Kit-Siangகூலாய்: பெர்சே-4 வாசகங்களைக் கொண்ட மஞ்சள் டி-சட்டைகளை அவசரம் அவசரமாக முன்கூட்டியே தடைவிதித்து அறிவித்த உள்துறை அமைச்சர் சாஹிட் ஹாமிடி, இனத் துவேஷ வாசகங்களைக் கொண்ட சிவப்பு நிற டி-சட்டைகளை மட்டும் ஏன் இன்னும் தடை செய்யாமல் இரட்டைப் போக்குடன் செயல்படுகின்றார் என ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிவப்பு டி-சட்டைகள் இன மோதலை உருவாக்கும், இனத் துவேஷத்தை ஏற்பட்டுத்தும் வகையிலான வாசகங்களைக் கொண்டிருக்கின்றன என்பதோடு, இரத்தக்களரி படங்களையும் கொண்டிருக்கின்றன என்றும் கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

“பெர்சே ஓர் அமைதிப் பேரணியாகவும், தூய்மையான, நியாயமான தேர்தல்கள், தூய்மையான அரசாங்கம் ஆகியவை அமைய வேண்டும் என்ற நோக்குடனும் நடத்தப்பட்டது. இனம், மதம், கட்சி பேதமின்றி அனைவரும் பெர்சேயில் கலந்து கொண்டனர். மாறாக, சிவப்பு பேரணியோ, இனவாத அடிப்படையில் நடத்தப்படுகின்றது. இருப்பினும் அதற்கான டி-சட்டைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை” என்றும் லிம் கிட் சியாங், நேற்றிரவு ஜோகூர், கூலாய் நகரிலுள்ள ஜசெக தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

சிவப்பு ஆடை பேரணி மலாய்க்காரர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்துகின்றது என்றும், பிரதமர் நஜிப்பின் அரசியல் தலைமைத்துவத்தை நிலைநிறுத்துவதற்காகவே, இந்தப் பேரணி நடைபெறுகின்றது என்றும் நாடு முழுக்க அச்சத்தையும், அக்கறையையும் இந்தப் பேரணி ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது என்றும் லிம் கிட் சியாங் சாடியுள்ளார்.