Home உலகம் காமன்வெல்த் அமைப்பை நினைவுகூறும் நிகழ்ச்சியில் உடல்நிலை காரணமாக எலிசபத் அரசியார் கலந்துகொள்ளவில்லை!

காமன்வெல்த் அமைப்பை நினைவுகூறும் நிகழ்ச்சியில் உடல்நிலை காரணமாக எலிசபத் அரசியார் கலந்துகொள்ளவில்லை!

666
0
SHARE
Ad

Queen-Elizabethலண்டன், மார்ச் 11 –  பிரிட்டனின் அரசியார் இரண்டாம் எலிசபெத் மகாராணி வயிற்றுவலி காரணமாக கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் மறுநாள் வெளியேறினார்.

இதனால், மருத்துவர்கள் ஆலோசனைப்படி இன்று நடைபெற்ற  காமன்வெல்த் அமைப்பை  நினைவுகூறும் நிகழ்ச்சியில் அரசியார் கலந்துகொள்ளமாட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை  தெரிவித்தது. 86 வயதாகும் அரசியார் கடந்த 10 வருடத்தில் இப்போது தான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் முதன் முறையாக சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட்மினிஸ்ட்டர் அபே என்ற பழங்கால தேவாலயத்தில் நடைபெறும், 54 நாடுகளின் தூதர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில், அதன் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் அரசியார், கலந்துகொள்ள இயலாததால், அவருக்கு பதிலாக அரசியாரின் கணவர் 91 வயதாகும் பிலிப்ஸ் இளவரசர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

#TamilSchoolmychoice

பிபிசியின் தகவல்படி, மருத்துவர்கள் அரசியார் தொடர்ந்து 1 மணி நேரம் தேவாலயத்தில் அமர்ந்திருப்பதை தவிர்க்கச் சொல்லியிருந்த போதும், அரசியார் மாலையில் நடைபெறும் விருந்து நிகழ்வில் கலந்துகொண்டு ஒரின சேர்க்கையாளர்கள் உரிமைகள்  உட்பட சில முக்கிய பிரச்சினைகள் அடங்கிய சாசனத்தில் கையெழுத்திடுவார் என அரண்மனை செய்திகள் கூறியுள்ளன.

ஒரு முக்கிய நிகழ்வில் கலந்து கொள்வதிலிருந்து எலிசபெத் ராணியார் ஒதுங்கியிருப்பதால் அவரது உடல் நலம் குறித்த யூகங்களும் ஆரூடங்களும் லண்டன் வட்டாரங்களில் பரவத் தொடங்கியுள்ளன.