Home தொழில் நுட்பம் மோடி எங்கள் தலைமையகத்திற்கு வருகிறார் – உற்சாகத்தில் மார்க் சக்கர்பெர்க்!

மோடி எங்கள் தலைமையகத்திற்கு வருகிறார் – உற்சாகத்தில் மார்க் சக்கர்பெர்க்!

473
0
SHARE
Ad

modiமென்லோ பார்க் (கலிபோர்னியா) – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 26-ம் தேதி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்கு பயணப்பட இருக்கிறார். அவரின் வருகையை ஒட்டுமொத்த அமெரிக்காவே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்நிலையில் மோடி, 27-ம் தேதி நட்பு ஊடகமான பேஸ்புக்கின் தலைமையகத்திற்கு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், “நான் இதனை அறிவிப்பதில் உற்சாகம் அடைகிறேன். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாதம் பேஸ்புக்கின் தலைமையகத்திற்கு வருகை தர இருக்கிறார். இந்த சந்திப்பின் போது கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உங்கள் கேள்விகளுடன் தயாராக இருங்கள்”

“கடந்த வருடம் நான் இந்தியா சென்று இருந்த போது, அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அதனை மிகப் பெரும் கௌரவமாகக் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.